தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் 15 நாட்கள் “சூரிய சக்தி நிறுவல் பயிற்சி” வழங்கப்படவுள்ளது. வருகிற 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற வலைதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர 10ஆம் வகுப்பு படித்திருப்பது அவசியம். சென்னையில் தங்கி பயிற்சி பெற குறைந்த கட்டணத்தில் அறைகள் ஏற்பாடு செய்யப்படும்.