சிலுவையா ஆலயப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பாத்திமா நகர் பங்கு சிற்றாலயம் சிலுவையா ஆலயப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (செப்.,13) மாலை தொடங்கியது. முதல் நிகழ்வாக ஜெபமாலை, பிராத்தனை, திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு பின் கொடியேற்ற விழா ஜீவா நகர் பங்குதந்தை இருதயராஜ் பர்னாந்து தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து "சிலுவை பக்தியின் அடையாளமா அல்லது விடுதலையின் அடையாளமா" என்ற தலைப்பில் புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிதி நிர்வாகி அருட்பணி அமலன் தமியான் இறை செய்தி வழங்கினார். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பங்கு தந்தை ஜேசுதாஸ் பர்னாந்து வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜெயந்தன் ஆயர் இல்லம்அருட்தந்தை, திருஇருதய அருட்சகோதரிகள், பாத்திமா நகர் ஊர் நலக் கமிட்டி தலைவர் செல்வராஜ், பங்கு பணிக்குழு, பங்கு இறை மக்கள், மற்றும் பாத்திமா நகர் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.