விளாத்திகுளத்தில் புதிய கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் அய்யனார்புரத்திலும், விளாத்திகுளம்- மதுரை சாலை BSNL அலுவலகம் அருகே உள்ள இடத்தினையும் தேர்வு செய்யும் பொருட்டு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், வணக்கத்திற்குரிய தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட துறை சார்ந்த நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.