சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

52பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் மணி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்க தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வேப்பலோடை வி கழுகாசலபுரம் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது

வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி போக்சோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குற்றவாளி மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி