தூத்துக்குடி: மீன்களின் விலை குறைவு - பொதுமக்கள் மீன்கள் வாங்க ஆர்வம்

53பார்த்தது
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக ஆர்வமுடன் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் இன்று சனிக்கிழமை என்பதால் கரை திரும்பினர். இதன் காரணமாக நாட்டுப் படகு மீன்பிடி துறைமுக ஏழக் கூடத்திற்கு அதிக அளவு மீன்கள் வந்தன. மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. 

சீலா மீன் ஒரு கிலோ 700 ரூபாய் வரையும், விளை மீன், ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ 400 ரூபாய் வரையும், தோல்பாறை கிலோ 200 ரூபாய் வரையும், சூரை மீன் கிலோ 180 ரூபாய் வரையும், ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி உள்ளிட்ட மீன்கள் கிலோ 300 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும் விற்பனையானது. மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி