உலக மகளிர் தினம்; கடல் அலையுடன் போராடும் மீனவப் பெண்கள்

83பார்த்தது
தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே தனித்தீவு போல் உள்ளது. விவேகானந்த நகர் கடற்கரை பகுதி, இங்கு 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலே மீன் பிடித்தல் தான், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர். அதிகாலை 3மணிக்கு விழித்தெழுந்து பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு உணவு தயார் செய்து வைத்து விட்டு 4 மணி முதல் ஆண்களுடன் கடலுக்குச் செல்கின்றனர்.

ஒரு படகில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் என
மீன்பிடிக்க செல்லக்கூடிய பெண்கள் கரையில் இருந்து ஆழமான பகுதிக்குச் சென்ற பிறகு கடலில் வலையை வட்டமாக வீசி பின்னர் அந்த வலையை சுருக்கி இழுத்து மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே மீன்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது தங்கள் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு மற்றும் குடும்பச் செலவு என வார வட்டி, ஸ்பீடு வட்டி என அதிக வட்டிக்கு பணம் வாங்கி மிகவும் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய பெண்கள்

இந்தக் கடனை அடைப்பதற்கு ஆண்கள் மட்டும் உழைத்தால் போதாது என தங்கள் உயிரை பணிய வைத்து தாங்களும் கடல் தொழிலுக்கு சென்று வருவதாக பெண்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி