தூத்துக்குடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமான பட்ஜெட்டை கண்டித்து பட்ஜெட் நகலை கிழித்து தூத்துக்குடி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் அம்பேத்கார் சிலை முன்பு பட்ஜெட் நகலை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டம் 25 பேர் கைது
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார் இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கும் வகையில் எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு தூத்துக்குடி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து பட்ஜெட் நகலை கிழித்து எறியும் போராட்டம் நடைபெற்றது ஐக்கிய விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு பட்ஜெட் நகலை கிழித்தெறிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை தென்பாகம் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர.