தூத்துக்குடி கேவிகே சாமி நகரைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி காயத்ரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு "எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் மாரிமுத்து தருவைகுளத்தில் உள்ள விசைப்படகில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் கடைசியாக 10. 09. 24 அன்று தருவைகுளத்தில் இருந்து கிளம்பி கேரள மாநில கடற்கரை பகுதியில் மீன்பிடித் தொழில் செய்ய மேற்படி விசைப்படகில் சக மீனவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் 10. 01. 2025 அன்று கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் மேற்படி விசைப்படையில் மீன் பிடிக்கச் சென்று கொண்டிருக்கும் போது கடலில் தவறி விழுந்ததாக கூறப்பட்டது. அப்போது அவர் சண்முகம் என்பவரது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நாங்கள் கேரள மாநிலம். எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அதன் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த கடற்படையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில் எனது கணவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் எனது கணவருடன் தொலைந்து போனதாக சொல்லப்பட்ட செல்போன் சுவிட் ஆன் செய்யப்பட்டுள்ளது. செல்போன் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றிய முழு தகவலை எங்களால் அறிய முடியவில்லை. என்றார்.