அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு

60பார்த்தது
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர்கள் விரோத தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தொகுப்பு சட்டம் என்பது செயல்பட்டு வரும் 36 வாரியங்களையும் கலைக்கக்கூடிய ஆபத்தான சட்டமாகும்

மத்திய மாநில அரசுகளுக்கு 65 சதவீதம் நிதியை ஈட்டி தரும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு மூன்று சதவீதம் லெவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் அதேபோன்று ஜிஎஸ்டியில் ஒரு சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

அரசாணை போட்டு அறிவிப்போடு உள்ள முடங்கிப் போய் உப்பள தொழிலாளர் நல வாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் உப்பள தொழில் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் லெவி முறை கொண்டு வரப்பட்டு உப்பள தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி