
தூத்துக்குடி: 517 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடியில் நடந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 517 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார். தூத்துக்குடி வ. உ. சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் விழாப்பேருரையாற்றி வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.