தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்

77பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் அருகே கே. குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் பட்டா திருத்தம் தொடர்பாக மனு அளிக்க வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த பெண் காவலர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து விசாரித்தனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். அப்போது அந்த பெண்மணியுடன் வந்த அவரது பேத்தி அதனை செல்போன் மூலமாக வீடியோ எடுத்தார்.

 அங்கு வந்த போலீசார் ஒருவர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த பெண், பட்டா திருத்தம் தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எங்களை அலைக்கழிக்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும். கடந்த முறை நிறைய பேர் பேட்டி எடுத்தார்கள் ஆனால் வரவில்லை. அதனால் தான் நானே எடுத்து குரூப்பில் போட்டு அதன் மூலமாகவாவது நடவடிக்கை கிடைக்கும் என்று எடுத்தேன் என்றார். 

சமீபகாலமாக முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக பல்வேறு செய்திகளை பாதிக்கப்பட்ட மக்களே வெளிக்கொண்டுவருகிறார்கள். நூற்றுக்கணக்கான மனுக்களுக்கு செய்திதாள்களுக்கும் இடமில்லாத நிலை, தொலைக்காட்சிகளிலும் முக்கிய பிரச்சனைகளை மட்டும் ஒளிபரப்பு செய்ய முடிகிறது. தற்போது தங்கள் பிரச்சனைகளை வாட்ஸ்ஆப் மூலமாக கொண்டுவந்து மக்களே ஊடகமாக மாறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி