தூத்துக்குடி: பணம் மோசடி: தந்தை-மகன் குண்டர் சட்டத்தில் கைது

85பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து பணத்தை இரட்டிப்பாக்க தருவதாக கூறி ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்த தந்தை மற்றும் மகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து அதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக்க தருவதாக கூறி ரூபாய் 2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டையபுரம் புங்கவர்த்தனம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (63) மற்றும் அவரது மகன் அய்யாதுரை (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு-I போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி