தூத்துக்குடி: மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை

85பார்த்தது
தூத்துக்குடி: மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை
தூத்துக்குடியில் 2வது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேசன் (37). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் கணேசனுக்கு, தூத்துக்குடி ஜேஜே நகரில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். நேற்று (மார்ச் 17) இரவு அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கணேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி