உணவு பொருள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி!

65பார்த்தது
தூத்துக்குடி துறைமுக ஆணையம் சார்பில் 54வது பாதுகாப்பு வாரம் முன்னிட்டு உணவு பொருள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி; - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தூத்துக்குடி துறைமுக ஆணையம் சார்பில் 54வது பாதுகாப்பு வாரம் இன்று துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உணவு பொருள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஷெபாலி புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு உயர் துறை மேம்பாட்டு மையம் கோலிகிராஸ் கல்லூரி உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை மாணவர்கள் இணைந்து கண்காட்சியை நடத்தினர்.

இதில், குறிப்பாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான, சத்தான உணவுகள், கீரைகள் குறித்தும், சாப்பிட கூடாத உணவுகள் எவை என்பது குறித்தும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

இதில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 1000-த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி