தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வசித்து வரும் அருந்ததிய இன மக்களுக்கு அரசு சமுதாய நலக்கூடம் கட்டித் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேலாயுபுரம் கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட அருந்ததிய இன மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் இவர்களது வசிக்கும் பகுதி அருகே முன்பு அரசு பள்ளி செயல்பட்டு வந்த இடம் தற்போது காலியாக உள்ளது
இந்த இடத்தில் தங்களுக்கு சமுதாய நலக்கூடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்