தூத்துக்குடி: விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

50பார்த்தது
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் விசைப்படகுகளுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாத மீனவளத் துறையை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று இரண்டாவது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி