தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கரை திரும்பினர் இந்நிலையில் கடந்த 11 12 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதன் காரணமாக குறைவான நாட்டுப் படகுகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்று திரும்பின இதன் காரணமாக இன்று மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.
சனிக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது இதன் காரணமாக மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது சீலா மீன் கிலோ ஆயிரம் ரூபாய் வரையும் விளைமீன், பாறை , ஊலி ஆகிய மீன்கள் கிலோ 600 ரூபாய் வரை விற்பனையானது நண்டு கிலோ 500 ரூபாய் வரை விற்பனையானது கிழை வாளை கிலோ 150 ரூபாய் வரையும் தட்டை கோளா கிலோ 100 ரூபாய் வரையும் விற்பனையானது ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்களான பண்டாரி கிலோ 450 ரூபாய் வரையும் தம்பா , மலுவா ஆகிய மீன்கள் கிலோ 350 ரூபாய் வரையும் விற்பனையானது.
மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டாலும் விலையை பொறுப்பெடுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.