
தூத்துக்குடி: பைக்குகள் மோதல்; முதியோர் இல்ல நிர்வாகி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சேகர் (62), இவர் நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சி குழு செயலாளராக உள்ளார். மேலும் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை வீட்டில் இருந்து தனது பைக்கில் முதியோர் இல்லத்திற்கு நாகலாபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகலாபுரம் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரி பாண்டி மகன் மெர்லின் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.