தூத்துக்குடி: முதல்வர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா்.. அமைச்சர்

51பார்த்தது
தூத்துக்குடி: முதல்வர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா்.. அமைச்சர்
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பாக மகளிர் தின விழா பெரிய செல்வம் நகர் இசேவை மைதானத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலாளர் ராதா தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழுக்களுக்கு பாிசுகள் வழங்கி பேசுகையில் "கலைஞர் ஆட்சியில் 1989ல் சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் முன்னேற்றதிற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாறிய பின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முடங்கி கிடந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பெண்களுக்கான விடியல் பயணத்திற்கு முதல் கையெழுத்திட்டாா்.

பின்னா் மகளிர் உாிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்லூாி படிப்பிற்கு பெண்களுக்கு ஆயிரம் வழங்கப்படுகிறது. ஓவ்வொரு சுய உதவி குழுக்களுக்கும் 20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு சொந்தமாக தொழில் செய்வதற்கும் அவர்களது வாழ்வில் பொருளாதார நிலை முன்னேற்றம் அடைவதற்கும் உதவியாக இருந்து வருகிறது. இப்படி பல்வேறு வகையில் பெண்கள் நலன் தான் முக்கியம் என கருதி தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறாா் என்றார்.

தொடர்புடைய செய்தி