தமிழகத்தில் மின்மாற்றி பழுதை சரிசெய்ய விவசாயிகளிடமோ பொதுமக்களிடமோ கட்டணம் வசூல் செய்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில், "அதிகரித்து வரும் மின் தேவையை ஈடு செய்ய தகுந்த ஆய்வுகள் மேற்கொண்டு தேவையான இடங்களில் துணை மின் நிலையங்களை அமைத்து வருகிறோம்" என கூறியுள்ளார்.