கஜா புயல் இழப்பீடு கிடைக்கவில்லை என்று அரசிடம் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. கஜா புயலால் இடிந்த வீடுகள், பயிர் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.