சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (பிப். 11) காலை 7 மணியில் இருந்து மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைத்ததாகக் கூறி ஆத்திரமடைந்த கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.