தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நரேஷ் குமார் என்பவர் அண்மையில் காலமான நிலையில் அவரின் 16ம் நாள் நினைவு அஞ்சலி கூட்டமும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியை சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி மறைந்த நரேஷ் குமாரின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்த கட்சியினரும் கலங்கி போய் நின்றதை காண முடிந்தது.