சென்னை ரயில்வே கோட்டத்தில் பொன்பாடி - ஆந்திர மாநிலம் நகரி, வேப்பகுண்டா - புத்துார் தடத்தில் கணினி மயமாக்கப்பட்ட நவீன தானியங்கி சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிக்னல் முறையால், ரயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்படுவது கணிசமாக குறையும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ரயில்களுக்கு விரைவாக சிக்னல் அளிப்பதோடு துல்லிய தன்மையும் அதிகமாக இருக்கும்.