நெல்லை ஆட்சியராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் சுகுமார் என்பவர் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று நெல்லை ஆட்சியர் சுகுமார் டவுன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வுக்கு சென்றார். அப்போது அங்கு மருத்துவமனையின் செயல்பாடு குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.