கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 25ஆம் தேதி தொடங்கி, மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் நடைபெறும் இடங்கள், நேரம், அணிகள் மோதும் விவரங்கள் அடங்கிய IPL தொடருக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மெகா ஏலத்தின் மூலம் அணிகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால் இந்த தொடரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.