1997-ம் ஆண்டு ஜே.கே ரவுலிங் எழுதிய ‘ஹாரிபாட்டர்’ புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை ரவுலிங் எழுதினார். இந்த புத்தகங்களை கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த நாவலின் முதல் பதிப்பு சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.