திருநெல்வேலி மாவட்டம் மத்திய சிறை நூலகம் சார்பில் மாநகராட்சி வர்த்தக மையத்தில் புத்தகம் தானம் பெற கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் பலரும் ஆர்வமுடன் புத்தகங்களை தானம் செய்து வருகின்றனர். நேற்று இரவு பொருநை புத்தக திருவிழா அரங்கு எண் -4 இல் அமைத்துள்ள கூண்டுக்குள் நெல்லை மாநகராட்சி மேயர் இராமகிருஷ்ணன் என்பவர் சிறைக்கு தானமாக புத்தகங்களை வழங்கினார்.