தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 10) ரகசியமாக சந்திப்பு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை அவர் சந்தித்து பேசியிருந்தார். 2026 தேர்தலில் அதிமுக - தவெக கூட்டணியை அமைக்க பிரசாந்த் கிஷோர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது.