நெல்லை ராஜகோபாலபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே மருத்துவ கழிவுகள் கட்டப்பட்ட விவகாரத்தில் மாநகராட்சி நகர் நல அலுவலர் இன்று நேரில் ஆய்வு செய்தார். கொட்டப்பட்ட மருந்துகள் அனைத்தும் காலாவதியானது என கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவ கழிவுகள் கொட்டியது யார் என்பது தொடர்பான விசாரணையில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.