தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு வரும் 2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்ட தவெக நிர்வாகிகள் நேற்று (ஜனவரி 30) இரவு ஆலோசனை நடத்தினர். இதில் முதலாம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி ஏழை மக்களை தேடி சென்று உதவி செய்ய வேண்டும், இளைஞர்கள் ரத்த தானம் செய்ய வேண்டும், கிராமங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.