திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று (பிப்ரவரி 4) கைதான இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லையில் அளித்த பேட்டியில், இவ்விவகாரத்தில் மிகப்பெரிய அறப்போராட்டம் உரிய அனுமதியோடு நடத்த திட்டமிட்டோம் ஆனால் இந்துக்களின் உணர்வுகளை நசுக்குகின்ற வகையில் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி இந்து விரோத ஆட்சி நடப்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் என கூறினார்.