சேலம் நகரம் - Salem City

சேலம்: சுவர் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் நிதி உதவி

சேலம்: சுவர் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் நிதி உதவி

சேலத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலத்த மழையின் காரணமாக குகை மூங்கப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகளின் மேல் விழுந்ததால் வீடுகள் பலத்த சேதம் அடைந்தது. இதனை அடுத்து சேதமடைந்த வீடுகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலெக்டர் பிருந்தா தேவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా