பொட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கொளத்தூர் மணி கோர்ட்டில் ஆஜர்

80பார்த்தது
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 2013 ம் ஆண்டு சேலம் வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி போலீசாரால் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நால்வரையும் பெட்ரோல் குண்டு வீசத்தூண்டியதாக திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கொளத்தூர் மணி உள்ளிட்ட ஐந்து பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி