உலக இருதய தினத்தை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டி 21 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர் ஆகிய பிரிவுகளில் ஓட்டப்பந்தயம் நடந்தது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது. இந்த ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவேரி மருத்துவமனை மாரத்தான் ஓட்டத்திற்கு சேலம் மருத்துவமனை இயக்குனர் செல்வம், மருத்துவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இருதய மருத்துவர்கள் மருத்துவ சுந்தர பாண்டியன், மருத்துவர் சதீஷ்குமார் , மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் இருதய விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தனர்.
21 கிலோமீட்டர், 10, கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை சேலம் கார்ப்பரேஷன் கமிஷனர் ரஞ்சித் சிங் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி சிவரஞ்சன் ஆகியோர் வழங்கினர்.