தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்பு சிஐடியு சங்கத்தினர் மறியல்

51பார்த்தது
சென்னையில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சங்க உரிமைகளை மறுத்து வருகிறது. குறிப்பாக தொழிற்சங்கம் அமைக்கும் முடிவிற்கு எதிராக சாம்சங் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
சாம்சங் நிர்வாகம் தொழிற்சங்க உரிமைகளை மறுக்கக்கூடாது சட்டப்படி சாம்சங் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். உரிமைக்காக போராடும் தொழிலாளர் மீது காவல்துறை பொய் வழக்கு போடக்கூடாது. தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை உடனடியாக பிரச்சனையில் தலையீடு செய்து இப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சாலைப்போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ். கே. தியாகராஜன் தலைமையில் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் சேலம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் மறியல் போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி