சேலம்: மாநகராட்சி பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய கவுன்சிலர்
சேலம் மாநகராட்சி 44-வது வார்டில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா வார்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வார்டு கவுன்சிலர் இமயவரம்பன், அவருடைய மனைவி பொன்னேஷ்வரி ஆகியோர் தலைமை தாங்கி, தூய்மை பணியாளர்கள், கொசுமருந்து அடிப்பவர்கள், பிட்டர், சூப்பர்வைசர், எல்ட்ரீசியன்கள் உள்ளிட்ட 97 பணியாளர்களுக்கு பேண்ட், சர்ட், சேலை, இனிப்பு, காரம், பட்டாசு உள்ளிட்ட தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினர்.