சேலம்: ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த கட்டுப்பாடு- கமிஷனர் தகவல்

66பார்த்தது
சேலம்: ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த கட்டுப்பாடு- கமிஷனர் தகவல்
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநகர காவல்துறை சட்டத்தின்படி போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு இது பொருந்தாது. இந்த நடைமுறை நேற்று(அக்.05) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. வருகிற 19-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி