சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வக்கீல் ராஜேந்திரன் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். இதனை அடுத்து இன்று சதாப்தி ரயில் மூலம் சென்னையில் இருந்து சேலம் வந்தார். ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திரனுக்கு கலெக்டர் பிருந்தா தேவி மலர் கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இதனை அடுத்து கிழக்கு, மேற்கு மற்றும் மாநகர செயலாளர்கள் வரவேற்று சால்வை அணிவித்தனர். தொடர்ந்து ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் வரவேற்று கொடுத்த சால்வைகளை அமைச்சர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக சேலம் வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு வரவேற்பு வழங்கப்பட்டதால். அந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.