சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிலி இவரது தந்தை கூட்டுறவு துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் இறப்பிற்கு பிறகு இவருடைய ஓய்வூதியத்தை ஷர்மிலிக்கு வழங்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் தனபால் தந்தையின் ஓய்வூதியம் உங்களுக்கு கிடைக்க தான் ஏற்பாடு செய்வதாக கூறி ரூபாய் 5000 லஞ்சமாக கேட்டுள்ளார். இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷர்மிலி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ் பி கிருஷ்ணராஜன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் நல்லம்மாள் முருகன் ஆகியோர் கருவூல கண்காணிப்பாளர் தனபால் ரூபாய் 5000 லஞ்சமாக பெறும் பொழுது கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவத்தால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.