சேலம்: டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை

55பார்த்தது
சேலம்: டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: - தமிழக அரசு ஊரக பகுதிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி, 15-வது நிதிக்குழு, கலைஞர் கனவு இல்லம், நமக்கு நாமே திட்டம், நபார்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 2 ஆயிரத்து 302 கோடியே 62 லட்சத்தில் 73 ஆயிரத்து 533 திட்டப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 52 ஆயிரத்து 771 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 20 ஆயிரத்து 762 பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், டெங்கு உள்ளிட்ட பருவகால காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் லலித்ஆதித்யநீலம் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி