சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று (செப் 24) மாலை திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.
சேலம் மாநகரில் சூரமங்கலம் ஐந்து ரோடு, ஏற்காடு அடிவாரம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.