தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, சேலம் சாரதா கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவிகள் சேலம் அரசு அருங்காட்சியகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கிலும், வரலாற்று களங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஶ்ரீ சாரதா மகளிர் கல்லூரியின் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவிகள், சேலம் அரசு அருங்காட்சியகத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நடைபெற்ற இந்த நிகழ்ச்யில், அருங்காட்சியகத்தில் இருந்த கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், மரச்சிற்பங்கள், காட்சிக் கூடம் மற்றும் அருங்காட்சியகத்தின் சுற்றுப்புறங்களை மாணவிகள் ஆர்வத்துடன் சுத்தம் செய்தனர். இதன் மூலம் மாணவிகள் பல்வேறு வரலாற்று சிற்பங்களையும், கல்வெட்டின் பெருமையையும் அறிந்து கொண்டனர்.