சோலார் மின்உற்பத்தி திட்டம்: மக்கள் வரிப்பணம் வீண்

54பார்த்தது
தமிழக முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு, பா. ம. க. சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம். எல். ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: -
சேலம் மாநகராட்சியில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் சுமார் 600 டன் குப்பைகள் கொட்டி எரியூட்டப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த செட்டிச்சாவடி குப்பை மேட்டிற்கு அருகில் சோலார்மின் உற்பத்தி செய்கிறோம் என்ற அடிப்படையில் திட்டம் தீட்டப்பட்டு ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கும்போதே இந்த திட்டம் இந்த பகுதிக்கு புகை மண்டலமாக உள்ளதால் செயல்படுத்துவது பயனற்றது என்று அதிகாரிகளிடமும், துறை செயலாளர் ஆகியோரிடமும் மனுக்களை கொடுத்தேன். ஆனாலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இதுநாள்வரை அந்த திட்டத்தில் ஒரு யூனிட் கூட மின்சாரம் உற்பத்தி செய்து மாநகராட்சிக்கு கொடுக்கப்படவில்லை. பாதுகாப்பற்ற முறையில் உள்ளதால் சோலார் தட்டுகளை உடைத்தும், திருடியும் சென்றுள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு பயன்படாது. மக்கள் வரிப்பணம் வீணாகும் என்று தெரிந்தே திட்டம் தயாரித்து கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணாக செலவழித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி