திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து இன்று (அக். 23) புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாகத் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.