பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை ஜாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியது உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியதால், அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டது. தற்போது ரூ.411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளதால், அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.