
லாரி - பேருந்து மோதி விபத்து.. 5 பேர் பலி
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.