மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதத் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் பிரிவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.