'பார்க்கிங்' பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்

58பார்த்தது
'பார்க்கிங்' பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இந்துஜா, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷணனிடம் கதையை கேட்டிருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது இயக்குனர் ராம்குமார், சிவகார்த்திகேயனை சந்தித்து தனது அடுத்த படத்தின் முழு கதையையும் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி