மழைநீரில் வலைவிரித்து மீன்பிடித்துச் சென்ற மக்கள் (வீடியோ)

64பார்த்தது
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கனமழையால் சூழ்ந்த வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவை அடுத்த அல்லலசண்ட்ரா மற்றும் எலஹங்கா பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் மக்கள் மீன்களை பிடித்து சென்றனர். தொடர் கனமழையால் பெங்களூர் நகர் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி